முதல்வர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் மு.க.ஸ்டாலின்!! மக்களைக் கவர்ந்த முதல்வர் என பாராட்டு!!

இந்தியாவில் டாப் 10 முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதன்மையானவராக பிரபல பத்திரிக்கை வெளியீட்டு உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை கொரோனாவை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேலும், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பத்து ஆண்டுகளுக்குப் பின் பதவியேற்ற திமுகவையும், முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற தன்னையும் மக்கள் புகழ்ந்து வாழ்த்தும் படி முதல் நாளே அசத்தலான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்வர் ஸ்டாலின் மேலும் கோரணா நிவாரணமாக 4000 ரூபாய் மற்றும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு மற்றும் மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணம், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்திற்கு கீழ் இணைப்பு மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் என 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

மேலும், பத்திரிகையாளர்களை களப்பணியாளர்களாக அறிவித்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது உயிரிழந்த குடும்பத்திற்கு பணி நியமனம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு கொரோனா நிதி போன்றவற்றை செய்து மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வை ரத்து செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினார். மேலும் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பித்தார்.

அதன்பின் அனைவரையும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கூறி இன்று தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். தளர்வுகளற்ற ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் என பல்வேறு ஊரடங்குகளை போட்டு கொரோனா வேகத்தை கணிசமாக குறைத்துள்ளார்.

இவ்வாறு அதிரடி முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளால் மக்களை கவர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாப் 10 முதல்வர்களில் முதலாவதாக பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. கிரவுட் விஸ்டம் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்தியாவிலேயே டாப் 10 முதல்வர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலிடம் பிடித்துள்ளார் என்பது இன்று வெளிவந்துள்ளது.

மேலும், கடந்த முறை கொரோனா நடவடிக்கைகளால் பெரிதும் பேசப்பட்ட கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள் இரண்டாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment