தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..!

0
339
#image_title

தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..!

எமன் சாலை என்று அழைக்கப்படும் தொப்பூர் கணவாய்… தருமபுரி மற்றும் சேலத்தை இணைக்கும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

இதில் சேலத்தில் இருந்து தருமபுரிக்கு செல்லும் சாலையில் பெரியளவில் விபத்து ஏற்படுவதில்லை. ஆனால் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு செல்லும் சாலை சற்று பள்ளமாக, குறுகிய வளைவை கொண்டிருப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது.

தினமும் தொப்பூர் கணவாய் சாலையை கடந்து செல்பவர்களுக்கு தெரியும்.. அதன் மரண பயணம்…

சாலை ஓரம் விபத்துக்குள்ளான வாகனங்கள் எந்நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் காட்சி ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தும்…

தமிழகத்தில் அதிகளவில் விபத்து ஏற்படுவது.. இந்த தொப்பூர் கணவாய் பகுதியில் தான். தொப்பூர் கணவாய் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது விபத்துகள் மட்டுமே…

அண்மையில் நடந்த கோர விபத்தில் கூட 4 பேர் சம்பவத்தில் உயிரிழந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்…

மேலும் சிலர் இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்பட்ட நிலையில் ஜனவரி 31 அன்று 4 மாத குழந்தை உயிரிழந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து இருக்கின்றது.

Previous articleகர்நாடகாவில் பரவி வரும் புது வைரஸ் காய்ச்சல்..! இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் அது தான்!
Next articleவிவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்!