விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்!

0
152
#image_title

விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்!

நாம் உயிர் வாழ உணவு மிகவும் முக்கியம். அதனால் தான் இந்த உணவு பொருட்களை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள்.. கடவுளாக பார்க்கப்டுகின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும் இந்தியாவில் அதன் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

காரணம் அரிசி உற்பத்தியில் இந்தியா உலகளவில் முக்கிய இடத்தில் இருக்கின்றது. விவசாயம் இந்தியாவின் முக்கிய ஆதாரமாக விளங்குவதால் அதை ஊக்குவிக்கும் விதமாக விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி யோஜனா என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

பிஎம் கிசான் விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் வருடத்தில் 3 தவணைகளாக ஊக்கத்தொகை செலுத்தப்பட்டு வரப்படுகிறது.

இதுவரை 15 தவணைகள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் 16வது தவணை தொகை இந்த மாதத்தின் 15 தேதியில் மத்திய அரசு செலுத்த இருக்கின்றது.

ஆனால் 16வது தவணை தொகை வங்கி கணக்குடன் KYC விவரங்களை அப்டேட் செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது.

இன்னும் 10 நாட்களில் 16வது தவணைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட இருப்பதால் பிஎம் கிசான் பயனாளர்கள் வங்கி கணக்குடன் KYC விவரங்களை அப்டேட் செய்துவிடுங்கள்.