கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்!

Photo of author

By Vijay

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்!

Vijay

Traffic Department in Coimbatore!! Drivers beware!

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்!

தமிழ்நாடு சாலை விபத்துக்கள்அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலவிதமான சாலை கட்டுப்பாட்டு விதிகள் புதிதாக அறிமுகப்படுத்திய போக்குவரத்து துறையினர்.

ஆனால் நமது மக்களே அதை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ராங் சைடு வருவது, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றி வாகனங்களை ஓட்டுவது போன்ற செயல்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணமே இருக்கிறது இதை கண்ட போக்குவரத்து துறையினர் அதிரடியாக செயல் இறங்கி உள்ளனர்.

கோவை மாவட்ட போக்குவரத்து துறையினர் இனி தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் என கரராக பேசி வந்தனர். ஆனால் மக்களோ சிறிது அளவு கூட கண்டு கொள்ளவில்லை இதனை அடுத்து போக்குவரத்து துறையினர் தலைகவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அபராதங்கள் விதித்து வருகின்றனர்.

இதனால் சற்று அச்சமடைந்த மக்கள் தலைக்கவசம் அணிய துவங்கி உள்ளனர் அபராதம் மட்டுமின்றி சாலை விதிகளை பற்றி மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு அவர்களை விடுவிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது.

போக்குவரத்து காவல்துறையினர் இதைகுறித்து பேசும்போது சட்டங்கள் கடுமையாகும் போது தான் தவறுகள் குறையும் அதனால் தான் இது போன்ற செயலை செய்துள்ளோம். தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தன் உயிரை விட பணத்தை தான் அதிகம் விரும்புகிறார்கள் அதனால் தான் இந்தவித அபராதங்கள்.