அமெரிக்காவில் இந்திய பெண்மணிக்கு நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் இந்திய பெண்மணிக்கு நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தற்போது காலகட்டம் வரை சில வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு மரியாதை தரக்குறைவாக நடத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது அமெரிக்கா நாட்டில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் இந்திய பெண்மணி ஒருவர் பணிபுரிந்து வருகிறார். திடீரென்று இவருக்கு,இவரது தந்தை உயிரிழந்த செய்தி வந்துள்ளது. தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்காக இந்தியாவிற்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பம் போட்டுள்ளார்.

இந்திய பெண்மணிக்கும் விசா தராமல் அங்கிருந்து தூதரக அதிகாரி ஒருவர் அப்பெண்மணியை ,நீங்கள் கிளம்புங்கள் என்று கூறி அங்கிருந்து செல்லுமாறு கடுமையாக கூறியுள்ளார்.இப் பெண்மணி என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றார். அதன்பிறகு அந்தப் பெண்மணி அவரது மொபைலில் இந்த தூதரக அதிகாரி விரட்டுவதை வீடியோவாக எடுத்தார். விசா கொடுக்கும் பணியை நிர்வகித்து வரும் இவர் தான் விஜய் சங்கர்.

இவ்வாறு மேற் பொறுப்பில் இருந்துகொண்டு வரும் மக்களிடம் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்வது நியாயமா என்று கேட்டு அங்கு நடந்ததை வீடியோ பதிவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சிறிது நேரத்திலே வைரலாக தொடங்கியது.இந்த வீடியோவை பார்த்த சிலர் அந்தப் பெண்மணிக்கு உதவியுள்ளனர். அவர்களின் உதவியால் அப்பெண்மணி இந்தியா வந்தடைந்தார். தனது தந்தையின் இறுதிச் சடங்கை நன்முறையில் முடிக்க உதவி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பெண்மணியின் சயோகித புக்தியால் இவருக்கு நீதி கிடைத்தது.அதுமட்டுமின்றி இணையத்தில் தற்போது வரை பெண்கள் பல தவறான நபர்களிடம் சிக்கிக்கொண்டு தனது வாழ்க்கையை தொலைத்து விடும் சமையத்தில் இந்த பெண்மணியின் தைரியமான இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment