ஹனிமூன் வந்த இடத்தில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!! பரபரப்பு தகவல்!!

Photo of author

By CineDesk

ஹனிமூன் வந்த இடத்தில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!! பரபரப்பு தகவல்!!

கரூர் மாவட்டத்தில் பொறியாளராக இருப்பவர் தான் தினேஷ் குமார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கிருபா என்னும் 25 வயது பெண்ணுடன் திருமணம் ஆனது.

இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக கன்னியாகுமரியில் உள்ள தமிழக கேரள எல்லையில் நெட்டா பகுதியில் இருக்கும் சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்த விடுதியில் சாப்பிடுவதற்காக இவர்கள் இருவருக்கும் நண்டு வழங்கப்பட்டது. இருவரும் நண்டை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட உடனேயே புது மணப்பெண்ணான கிருபாவிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இவர் உடனே சில மருந்துகளை சாப்பிட்டுள்ளார். ஆனாலும் இவருக்கு மூச்சுத்திணறல் சரியாகாத காரணத்தால் அருகில் உள்ள குலசேகரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவரின் உடலை உடற்கூறாய்விற்காக ஆசாரி பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த உயிரிழப்பு  உணவு விடுதியில் தரப்பட்ட நண்டு உணவால் ஏற்பட்டதா இல்லை உடலில் வேறு ஏதேனும் பிரச்சினை இருந்ததா என்பதை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் நடந்த மூன்றே மாதங்களில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து பத்மநாபபுரம் கோட்டாட்சியரும் விசாரித்து வருகின்றனர். மேலும் திடீரென இவ்வாறு ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

எனவே, உணவு அருந்தும் முன்பு அது பழைய உணவா அல்லது ப்ரெஷ் ஆன உணவா என்பதை தெரிந்து கொண்டுதான் உண்ண வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.