தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (42). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரத்தின் மனைவி அன்னலட்சுமி (39). இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூருக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.
மேலும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அவர்களின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேம்பூர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அதே பகுதியில் மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த கார் நிலை தடுமாறி சசிக்குமார் இயக்கி வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த தம்பதிகள் பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாசார்பட்டி போலீசார் இருவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அன்னலட்சுமி உயிரிழந்தார். மேலும் சசிகுமாருக்கு முதல்லுதவி செய்த பின்பு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். மேலும் இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.