தீபாவளி விடுமுறை! சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர்.
அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்தது.அப்போது நேற்று இரவு ரேவாவில் உள்ள சுஹாகி பஹாரி என்கிற இடத்தில் சாலையோரமாக லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.எதிர்பாராதவிதமாக அந்த லாரியின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு குழு உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டுகும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் அந்த விபத்தில் 15 பேர் பலியாகினர்,40பேர் படுகாயமடைந்தனர்.அவர்களை மீட்டு சுஹாகயில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.பலத்த காயமடைந்தவர்கள் ரோவாவின் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.