போதை தலைக்கேறியதால் நேர்ந்த சோகம்? உடல் கருகி உயிரிழப்பு!!

Photo of author

By Parthipan K

போதை தலைக்கேறியதால் நேர்ந்த சோகம்? உடல் கருகி உயிரிழப்பு!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செட்டி குப்பம் கிராமம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் தான் அண்ணாதுரை. இவருக்கு வயது 53 ஆக உள்ளது. இவர்களுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவர் சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இவர் குடி போதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் மற்றும் இரு மகளுடன் சண்டை போடுவார்.மனைவி மற்றும் இரு மகள்களையும் தகாத வார்த்தையால் பேசி அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் உள்ளார். பின் வீட்டிலிருந்து வெளியே வந்த அண்ணாதுரை அருகிலிருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனது உடலின் மேல் ஊற்றி தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்து கொண்டார்.

பின்னர் வெளியே அண்ணாதுரையின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம்பக்கத்தினர் அனைவரும் வந்தார்கள். பின் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். கவலைக்கிடமான நிலையில் அண்ணாதுரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை இறந்துவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடி குடியை கெடுக்கும் என்பது போல். சில வாழ்க்கையில் குடியானது  உயிரையே எடுத்துவிடுகிறது.