முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்! 

Photo of author

By Amutha

முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்! 

முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த பெண் கணவரால் கொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சின்ன சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி வயது 47. காளியம்மாள் முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் தன்னுடைய முதல்  கணவரை விவாகரத்து செய்துவிட்டு மேட்டூரைச் சேர்ந்த ரகு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

அவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த பொழுது காளியம்மாள் தலை மற்றும் உடல் பகுதியில் கடுமையான வெட்டு காயங்கள் ஏற்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தரவும் ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அக்கம்பக்கத்தினர் கொலை நடந்த அன்று ரகு தனது நண்பர்கள் சிலருடன் வீட்டிற்கு வந்ததாக கூறி உள்ளனர். இதனால் போலீசார் ரகுவை தேடி வந்தனர். மேலும் காளியம்மாளை ரகுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரேனும் முன் விரோதத்தினால் கொலை செய்தார்களா?  என்ற கோணத்திலும்  போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த ரகு கோபியில் உள்ள 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்கு வந்தடைந்து  மாஜிஸ்ட்ரேட் தமிழரசு முன்னிலையில் நேரில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்டர் உத்தரவு பிறப்பித்தார். பின்னர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் ரகு அடைக்கப்பட்டார். விசாரணையின் பின்னரே காளியம்மாளின் கொலைக்கான காரணம் தெரிய வரும்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.