தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை!

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை!

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12 வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.இவர் தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இவரை ஆர்.கே எனவும் அழைக்கப்படுகின்றார்.இவருடைய மனைவி ராஜி.மேலும் ராதாகிருஷ்ணன் புலிவேஷம் மற்றும் எல்லாம் அவன் செயல் ஆகிய திரைபடங்களில் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து ஜில்லா ,பாயும்புலி போன்ற படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவருடைய வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மதியம் ராதாகிருஷ்ணன் வெளியே சென்றுள்ளார்.அந்நிலையில் அவருடைய மனைவி ராஜி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.அப்போது மர்மநபர்கள் மூன்று பேர் அவருடைய வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.அங்கு தனியாக இருந்த ராஜியை கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர்.

அதனையடுத்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த 200பவுன் நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.பிறகு வேலை அனைத்தையும் முடித்து வீடு திரும்பிய ராதாகிருஷ்ணன் வீட்டிற்குள் சென்ற உடன் அங்கு அவருடைய மனைவி ராஜி கட்டப்பட்டிருப்படத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராதாகிருஷ்ணன் வீட்டில் பணிபுரிந்தவர்களை அழைத்துள்ளனர்.அப்போது காவலாளியாக இருந்த ரமேஷ் மட்டும் காணவில்லை.

அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.அப்போது அதில் பதிவாகியிருந்த காட்சிகளில் ராதாகிருஷ்ணனின் வீட்டில் பணிப்புரிந்த காவலாளி உட்பட மூன்று பேர்கள் வீட்டிற்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து செல்வதும் தெளிவாக பதிவாகி இருந்தது.

அதனால் ரமேஷ் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.அதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிசென்ற மூன்று போரையும் தேடி வருகின்றனர்.இந்த தகவல் திரையுலகத்தினருக்கு அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment