நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர்க்கு நேர்ந்த சோகம்! பரிதாபமாக உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் யாசின்.இவருடைய மகன் ஆரிப்.இவருடைய உறவினர்களான அல்அமீன்,பரிஷத் ,நவாஸ் ,அல்போன்சா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் வட்டம் ,ஜவ்வாது மலை அடிவார கிராமத்தில் உள்ள குட்டூர் நீர்வீழ்ச்சியை காண நேற்று மதியம் 12மணியளவில் சென்றனர்.
அங்கு சென்று நீர்வீழ்ச்சியை பார்த்தவுடன் அவர்களுக்கு அருகில் சென்று குளிக்க வேண்டும் என எண்ணினார்கள்.அப்போது அவர்கள் ஆரிப் நீர்வீழ்ச்சியின் அருகாமையில் குளிக்க சென்றனர்.அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அதில் அங்கிருந்த பாறையில் மோதி படுகாயம் அடைந்தார்.
அதன் பிறகு சிறுது நேரத்திலேயே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குட்டையில் மூழ்கி இருந்த ஆரிப் சடலத்தை மீட்னர்.
அதனையடுத்து ஆரிப் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.