சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் நேர்ந்த சோகம்! திடீர் துப்பாக்கி சூட்டில் 6 உயிரிழப்பு !

Photo of author

By CineDesk

 

சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் நேர்ந்த சோகம்! திடீர் துப்பாக்கி சூட்டில் 6 உயிரிழப்பு !

அமெரிக்காவில் சுதந்திர தின விழா ஆண்டுத்தோறும்  கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க உருவாக்கிய 246 ஆண்டுகள் முடிவடைந்ததால் அந்நாட்டில் சிறப்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. மேலும் சுதந்திர தின விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளனர். கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்பு கண்கவர் நிகழ்ச்சிகளையும் பிரமாண்டமாக நடைப்பெற்றது.

இந்நிலையில் சிகாகோவில் உள்ள ஜலேண்ட் பூங்கா பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது அணிவகுப்பு தொடங்கியதால் அனைவரும் ஒருவர் பின்னர் ஒருவர் மகிழ்ச்சியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.  அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்நிகழ்வில் துப்பாச்சூடு நடத்தியதால் ஆறு பேர் இறந்துவிட்டனர். மேலும் 20க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அணிவகுப்பைச் சாலையில் இருபுறமும் இருந்த பார்த்து ரசித்த பொதுமக்கள் துப்பாக்கி சூடு நடந்ததும் அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். சீருடை போன்ற உடையில், தலையில் தொப்பியுடன் அணிவகுப்பு பகுதியில் கட்டிட மேற்கூரை ஒன்றில் துப்பாக்கியுடன் ஒருவர் சென்றுள்ளார். இதனை சிலர் பார்த்து உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க ஊடகங்களும் உறுதிப்படுத்தி உள்ளன.

இந்த அணிவகுப்பு நடைபெற்ற போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டு கூரையிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பெயர் ராபர்ட் கிரமோ என்பது தெரிய வந்துள்ளது. அணிவகுப்பு நிகழ்ச்சியை சிதைப்பதற்காக வீட்டின் கூரை மீது நின்று துப்பாக்கி சூடு நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் தொடர்ந்து போலீஸ் அவரை விசாரித்து வருகிறார்.

இதனிடையே, துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்  தெரிவித்துள்ளார். தொடர்ந்து அமெரிக்காவில் பள்ளிகள், தேவாலயங்கள், மளிகை கடைகள் மீது நடத்தப்படும் தாக்குதலைநடைபெறுகிறது.