அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர்! எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி வியூகம்!

0
113

எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பதவிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பொதுச்செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு காட்சி ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடையே எழுந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பன்னீர்செல்வம் தரப்பினர் பல எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள், அதோடு பன்னீர்செல்வம் சார்பாக இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட கதவுகள் தட்டப்பட்டனர்.

ஆனால் நீதிமன்றமோ கழக பொதுக்குழுவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்து விட்டது, இதற்கு நடுவில் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு அதிமுகவினரின் ஆதரவு வெகுவாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தலைநகர் சென்னையில் வரும் 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக விவாதம் செய்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்வது என்பது எந்தளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை, இருந்தாலும் உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்து விட்டால் அதன் பிறகு ஓபிஎஸ் நினைத்தாலும் எதையும் செய்து விட முடியாது என்பது அவருடைய ராஜதந்திரமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கின்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அதிமுகவின் உறுப்பினர்களுக்கு மூன்று பக்க கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது.

அதில் கழகப் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியைச் சார்ந்தவர்கள் பொதுக்குழு கூட்டத்தை கழக சட்டதிட்ட விதி 7ன் அடிப்படையில் உடனடியாக கூட்ட வேண்டும், அதோடு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த கழகப் பொதுக்குழுவில் விண்ணப்பத்தினடிப்படையில் அந்த பொதுக்குழுவானது கூட்டப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கழக பொதுச்செயலாளர் பொறுப்பு தொடர்பாக விவாதம் செய்து முடிவெடுப்பது, அத்துடன் கழக இடைக்கால பொதுச்பொதுச்செயலாளரை நடைபெற உள்ள பொதுக்குழுவில் தேர்வு செய்து அறிவிப்பது, கழக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டுவது, வழித்ததை தொடர்பாகவும் விவாதிக்கப்படவிருப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில், அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஏகபோக ஆதரவுடன் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இதே வேகத்தினடிப்படையில் பொதுச் செயலாளர் என்ற பதவியை அடைந்து விடுவது என்று முடிவு செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் தொண்டர்களால் தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் பின்பு யார் நினைத்தாலும் எதுவும் செய்து விட முடியாது என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.