இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.மேலும் கடந்த நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தற்போது கார்த்திகை தீப திருநாளையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் ,காரைக்கால் புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வந்தது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி அதிகளவு கனமழை பெய்ததில் கல்லாறு மற்றும் ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாதையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.மேலும் அப்போது தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
அதனால் உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் ரயில் பாதையில் விழுந்துள்ள பாறை மற்றும் மண் குவிந்து இருப்பதை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதினால் நாளை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.