விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற திமுகவின் வாக்குறுதி!! தலை தூக்கியது பரந்தூர் விமான நிலைய போராட்டம்! என்ன செய்யப் போகிறது திமுக அரசு?

0
291

விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற திமுகவின் வாக்குறுதி!! தலை தூக்கியது பரந்தூர் விமான நிலைய போராட்டம்! என்ன செய்யப் போகிறது திமுக அரசு?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார,13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்க மத்திய மாநில அரசு சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் கடந்த 145 நாட்களாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதைத்தொடர்ந்து ஏகனாதபுரம் கிராமத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி,விமான நிலையம் கட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து,கிராம உரிமை மீட்பு பேரணி நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக் குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த இளங்கோ தெரிவித்தார்.

அதன்படி 146 ஆவது நாளான இன்று டிசம்பர் 19 திட்டமிட்டபடி 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், வாயில் கருப்பு துணி கட்டி,கையில் கருப்பு கொடி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல ஏகனாதபுரம் அம்பேத்கர் சிலை முன்பு குவிந்தனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள்,
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலத்தை பாதுகாப்போம் என்று முதல்வர் வாக்குறுதி அளித்தார். மேலும் கோவை அன்னூர் விவசாயம் நிலங்களை கையாகப்படுத்த மாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.அதேபோன்று பேரன்தூர் விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கிராம மக்களின் இந்த பேரணியை தொடர்ந்து 1000 காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் 10 பேரை மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்று ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நாளை தலைமைச் செயலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி!
Next articleரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here