குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்!
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். மேலும் இது நகரத்திற்கு அப்பால் உள்ளதால் இங்கு போதிய வசதி ஏதும் இல்லை. நவீன வசதிகள் கூடிய மருத்துவமனை பள்ளி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இங்கு காணப்படவில்லை. தர்பர் கார் மாவட்டத்தில் வசித்து வரும் அந்தப் பெண்மணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு திடீரென்று ஒருநாள் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அங்கு இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலோ மருத்துவர்கள் காணவில்லை.
அதனால் அங்கிருந்த ஊழியர்கள் அப்பெண் மணிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். ஊழியர்கள் பழக்கம் இன்றி அறுவை சிகிச்சை செய்ததால் குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டு விட்டது. மேலும் அந்த ஊழியர்கள் செய்வதறியாது அந்தப் பெண்மணியின் வயிற்றில் உள்ள குழந்தையின் தலையை வைத்து தைத்துள்ளனர். இதனை அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் மிகவும் கோபமுற்று அப்பெண்மணியை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும் தங்கள் கிராமத்தில் போதிய நவீன வசதிகள் கூடிய மருத்துவமனை இல்லாதது தான் இதற்கு காரணம் என கூறுகின்றனர்.