பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க ஈபிஎஸ் மறுப்பு! மீண்டும் தர்மத்தை கையிலெடுக்கிறாரா ஓபிஎஸ்?

0
59

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பரபரப்பு கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக சென்று கொண்டிருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ், உள்ளிட்டோர் தனித்தனியே தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் பன்னீர்செல்வம் மறுபடியும் தர்மத்தை கையில் எடுக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரையில் தற்போது வரையில் அந்த கட்சி கட்டுக்கோப்பாக தான் திகழ்ந்து வருகிறது. இரட்டை தலைமையின் கீழ் அந்த கட்சி நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக அந்த கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுத்து தொடங்கியது.

அப்படி ஒருவேளை ஒற்றை தன்மை என்பது ஓபிஎஸ் பக்கம் சென்றால் அவரால் சரிவர கட்சியை வழிநடத்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. நீண்ட காலமாக கட்சியில் இருந்தாலும் அவரிடம் போதுமான துணிச்சல் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதோடு எப்பொழுது வேண்டுமானாலும் அவர் சசிகலா பக்கம் செய்வதற்கான வாய்ப்புள்ளது.

ஏனெனில் ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவால்தான் அந்த கட்சி கொள்கை கொண்டுவரப்பட்டார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் நாளைய தினம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஆகவே இந்த கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பன்னீர்செல்வம் காவல்துறையினரிடம் மனு ஒன்றை வழங்கினார். ஆனால் அந்த மனு காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் முறை விடுவதற்கு பன்னீர்செல்வம் தரப்பு தன்னை தயார்படுத்திக் கொண்டது. இருந்தாலும்கூட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்தியே தீருவோம் என்று பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பன்னீர்செல்வம் தற்போது ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையிலெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது, அவர் இன்று மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பன்னீர்செல்வத்தை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வைத்த பிறகு அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து தான் தர்மயுத்தம் நடத்தி தியானம் செய்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அதேபோல தற்போது பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கே மீண்டும் தர்மத்தை தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.