இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!!

Photo of author

By Anitha

இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!!

Anitha

travel-to-sri-lanka-only-with-passport-people-are-ready-to-travel

இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!!

நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பலில் பயணம் செய்வதற்கு கப்பல் சேவை நாளையிலிருந்து தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோடை விடுமுறையில் இலங்கைக்கு சுற்றுலா செல்லவிருந்த பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கப்பலில் செல்வதற்கு ஆர்வமாக இருந்தனர் இந்நிலையில் கப்பல் சேவை வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இப்பொழுது கோடை விடுமுறையில் பலரும் வெளியயூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர். அதுபோல இலங்கைக்கும் அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே மாதம் 10 ஆம் தேதியே நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வராததால், கப்பல் போக்குவரத்து சேவை நாளை தள்ளி வைக்கப்பட்டது, ஆனால் திரும்பவும் மாற்றம் செய்து வரும் 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் வரும் 19ஆம் தேதிக்கு தங்களது பயண சீட்டை மாற்றி கொள்ளலாம் என கப்பல் போக்குவரத்து சேவை மையம் அறிவித்துள்ளது.

மேலும் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு  விசா கிடையாது என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் , கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டும் போதுமானதாகும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.