அனைத்துவித தோல் வியாதிகளும் குணமாக எளிய டிப்ஸ்!

0
342

அனைத்துவித தோல் வியாதிகளும் குணமாக எளிய டிப்ஸ்!

இன்றைய சூழ்நிலையில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் பலரும் அவதிப்படுகின்றனர். அதிலும் முக்கியமாக அரிப்பு ,சோரியாசிஸ், கரப்பான், வெண்படை, தேமல், இதுபோன்ற தோல் நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தோலில் ஏற்படக்கூடிய இந்த பலவித பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உடலில் கழிவுகள் அதிகம் தேங்கி இருப்பது தான். அதாவது ரத்தத்தில் டாக்ஸின் அதிகமாக இருப்பது டாக்ஸின் பாடி என்றும் கூறுவார்கள். இந்த டாக்ஸின் உடலில் எவ்வாறு அதிகமாகிறது என்றால் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதுதான். இயற்கை உபாதைகளை சரியான நேரத்தில் சரியாக கழிக்காமல் இருப்பது, உடலில் வியர்வை வெளியேறாமல் இருப்பது இது போன்ற காரணங்களினால் உடலில் டாக்ஸின் அளவு அதிகமாகின்றது.

இந்த டாக்ஸின் தோல் வழியாக வெளியேறும் பொழுது மேற்கூறிய தோல் வியாதிகள் நமக்கு அதிகம் வருகின்றன. இவை மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகள் சிறுநீர் பாதிப்பு உடையவர்கள், லிவர் பாதிப்பு உடையவர்கள், விஷக்கடி, பூச்சிக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரிப்பு போன்றவை ஏற்படும்.

இதுபோன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை வீட்டு வைத்தியம் மூலம் நிரந்தரமாக சரி செய்ய முடியும். எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

*முதலில் அரிப்பு உண்டாகும் இடங்களில் தடவுவதற்கு ஒரு ஆயில் தயார் செய்யப் போகிறோம்.

இதற்கு முதலில் தேவையானது
1. குப்பைமேனி இலைகள் பொடி செய்தது-2 ஸ்பூன்
2. வேப்பிலை பொடி-2 ஸ்பூன்
3. தேங்காய் எண்ணெய்- 100 மி.லி

குப்பைமேனி இலை பொடியும் வேப்பிலை பொடியும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேங்காய் எண்ணெயில் இந்த இரண்டு பொடி வகைகளையும் சேர்த்து நன்றாக காய்ச்சி ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை தினமும் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி வர அரிப்பு குணமாவதை நீங்கள் காண முடியும். நாளடைவில் இந்த எண்ணையை பயன்படுத்த அரிப்பானது முற்றிலும் நிரந்தரமாக குணமடைவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.

* இரண்டாவது ஆலிவேரா ஜெல் எனப்படும் கற்றாழை. அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி 20 நிமிடம் கழித்து குளித்து வர அரிப்பு காந்தல் போன்றவை நீங்கிவிடும். தினமும் செய்து வர நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவை மட்டுமல்லாமல் உடலின் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவது, நார்ச்சத்துள்ள உணவு வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது, மேலும் பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்வது குறிப்பாக பப்பாளி கொய்யாப்பழம் வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட உடலின் கழிவுகள் நீங்கி உடல் சுத்தமாகும் மேலும் தோல் வியாதிகளும் ஏற்படுவது குறையும்.

மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் சில உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கருவாடு,வாழைக்காய், பாகற்காய், மற்றும் அதிக புளிப்பு சுவை உள்ள உணவுகள், கம்பு சோளம், போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.

Previous articleதோனி பட நடிகையை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபல பாலிவுட் நடிகர் !
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!