திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை!! கிடைத்த வாய்பை பயன்படுத்தி கொண்ட அமுல் நிறுவனம்!!
உலக பணக்காரர் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது.
இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.
இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது.
இந்த வகை லட்டை சாப்பிட்டால் அவர்களின் ஜென்ம பாவங்கள் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை .இதனாலையே பக்தர்கள் பெரும் அளவில் லட்டுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த திருப்பதி லட்டுகள் மற்ற லட்டுகளை விட மிகவும் சுவையாக இருக்கும்.இந்த லடுகளில் முந்திரி ,திராட்சை ,நெய்,கற்கண்டு போன்ற பல பொருட்கள் சேர்க்கப்பட்டு இருக்கும்.
சுவை மிக்க திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் வழங்கி வந்த நந்தினி நிறுவனம் இனி நெய் வழங்க போவதில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது.மேலும் அவர்களின் நெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை தேவஸ்தானம் குறைக்க வேண்டும் இந்த கட்டுபடியாகாது என்று நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.மேலும் நிறுவனத்திடம் பேசிய பொழுது குறைந்த விலையில் நெய் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதனால் திருப்பதியில் லட்டு தயாரிக்க இனி நெய்யை அமுல் நிறுவனத்திடம் இருந்து பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் குஜராத் அரசின் கீழ் இயங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.