அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

Photo of author

By Sakthi

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த திருச்சி சூர்யா அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் பாஜக கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

திமுக கட்சியின். மூத்த நிர்வாகியாக இருக்கும் திருச்சி சிவா அவர்களின் மகன்தான் திருச்சி சூர்யா. இவர் திமுக கட்சிமீதும் அவருடைய தந்தை திருச்சி சிவா மீதும் கொண்ட அதிருப்தி காரணமாக திமுக கட்சியில் இருந்து விலகி தன்னை தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அவர்களின் முன்னிலையில் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதையடுத்து அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக பேசி வந்த திருச்சி சூர்யா அவர்களுக்கு ஓபிசி அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. அப்பொழுது ஒபிசி அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரண் அவர்களுக்கும் திருச்சி சூர்யா அவர்களுக்கும் மோதல் நிலவியது.

இதன் காரணமாக டெய்சி சரண் அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பாஜக கட்சி திருச்சி சூர்யா அவர்களுக்கு 6 மாதங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று தடை விதித்தது. இதன் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா கூறினார். சில நாட்கள் அமைதியாக இருந்த அவர் சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போஸ்ட் செய்தார்.

அந்த பதிவில் திருச்சி சூர்யா அவர்கள் “நான் பாஜக கட்சியை விட்டு வெளியே வந்தாலும் அண்ணாமலை அவர்களை விமர்சனம் செய்யாமல் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். யாரிடம் இருக்கின்றோம் என்பதை விட யாருக்காக உண்மையாக இருக்கிறோம் என்பது முக்கியம்.

நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். அப்படி முக்கியத்துவம் மற்றும் உண்மையாக இருக்க வேண்டிய நபர் அண்ணாமலை என்று நான் நினைத்தேன். ஆனால் அது முற்றிலும் பொய் என்று தெரிந்து விட்டது. அண்ணாமலை அவர்களின் பொய் பிம்பம் விரைவில் வெளி வரும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் திருச்சி சூர்யா அவர்கள் அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதன்படி திருச்சி சூர்யா அவர்கள் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.