முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

0
256

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா! 

மகளிர்க்கான முத்தரப்பு டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா தென்னாபிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி  தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியும் தகுதி பெற்றன.

இந்நிலையில் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி பைனலுக்கு முந்தைய கடைசி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பில்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ரன் எடுக்காமல் இந்திய பவுலர்கள் ஆரம்பம் முதலே கட்டுப்படுத்தினர். அந்த அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.  பின் வரிசையில் ஜைன்டா ஜேம்ஸ் 21 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர்  95 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா 42 ரன்கள், கேப்டன் ஹர்மன்ப்ரீதி கவுர் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர்.

இதையடுத்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு  இறுதிப் போட்டி வருகின்ற வியாழன் அன்று நடக்க இருக்கிறது.

 

Previous articleயுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்!
Next articleதளபதி 67 ல் வில்லன் இவர்தான்! படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!