கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

Photo of author

By Parthipan K

கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

Parthipan K

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரச்சாரங்கள்  சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர்களும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். இந்நிலையில், வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபரானால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்று தெரிவித்தார். கமலா ஹாரிசை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்று கூறிய டிரம்ப், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக மாற முடியாது என்றும் விமர்சித்தார்.