டிரம்ப் அதிரடி உத்தரவு

Photo of author

By Parthipan K

உலக நாடுகளில் எச்1 பி’ விசாவை அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் சார்ந்தவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த விசாவானது மூன்று ஆண்டுகள் என நிர்ணியக்கபட்டு இருக்கும் தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம் ஆனால் டிரம்ப்  பதவிக்கு வந்ததிலிருந்து  “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை கூறி வருகிறார்.
இதன் காரணமாக இந்த விசாவிற்கு கடும் கட்டுபாடுகளை விதித்து வருகிறார்
அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்களில் வெளிநாட்டினரை குறிப்பாக ‘எச்1 பி’ விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்த கூடாது என டிரம்ப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். முடிவில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்களில் வெளிநாட்டினரை பணியமர்த்த கூடாது என்பதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.