நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. நீண்ட ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் பிப்ரவரியில் அமெரிக்கா அமைதிக்கான ஒப்பந்தத்த்தை கையெலுத்திட்டது.
தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு வீரர்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தது. இது குறித்து டிரம்ப் ஆப்கானிஸ்தானில் நமது வீரர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக குறைத்தோம் அதை திரும்பவும் 4 ஆயிரமாக குறைக்க திட்டமிட்டவுள்ளோம் என கூறினார்.