கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

Photo of author

By Parthipan K

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 11 ஆயிரத்திற்கும் மேல் உயிர் பலி வாங்கி இருக்கிறது. தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று உலகம் முழுக்க பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் தற்போது அங்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் மக்களுக்கு மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது. இதில் தற்போது அமெரிக்கா வெற்றி கண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசிட்ரோமைசின் , ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆகிய மருந்துகளை கொரோனா பாதிப்பிற்கு பயன்படுத்தலாம் என்றும் இரண்டு மருந்துகளையும் ஒன்றாக சாப்பிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என செய்தி வெளியாகி உள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.