தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம்

Photo of author

By Parthipan K

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம்

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் ட்ரம்பின் உரை நகலை சபாநாயகர் நான்சி நார்நாராக கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்ம ஊர் அரசியல்வாதிகள் சட்டசபையில் சட்டையை கிழிப்பது, அறிக்கைகளை கிழிப்பது, சட்டசபையில் ஆட்டம் போடுவது பார்த்து அலுத்து போன நமக்கு, உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் உரைநகலை கிழித்து நாடாளுமன்றத்தையே தெறிக்க விட்டுள்ளார் சபாநாயகர் நான்சி.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுவார் என தெரிகிறது. ஜோபிடனின் மகன் ஹண்டருக்கு சொந்தமான உக்ரைனில் செயல்படும் நிறுவனம் மீதான ஊழல் புகாரை விசாரிக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனால், ட்ரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி கொண்டு வந்த பதவிநீக்க தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால், செனட் சபையில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை இருப்பதால் அங்கு பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெறுமா? என்பது கேள்விக்குறி தான்.

ஏற்கனவே, சபாநாயகர் நான்சிக்கும், அதிபர் டிரம்ப்க்கும் ஏழாம் பொருத்தம். இதற்கிடையில் இன்று நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் சபாநாயகர் நான்சி பெலுச்சியிடம் தனது உரை நகலை கொடுத்தார் டிரம்ப், அப்போது நான்சி கைகொடுக்க ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் தனது உரையை தொடங்கினார்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டது. ட்ரம்ப் தனது உரையில் ஆகா ஓகோ என தன்னை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார். கடுப்பான சபாநாயகர் நான்சி பெலுச்சி ட்ரம்பின் உரை நகலை நார்நாராக கிழித்து தொங்கவிட்டார்….