உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மீண்டும் களத்திற்கு திரும்பும் எண்ணமே இல்லை

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபடா பேசும்போது எங்கள் அணி மார்ச் மாதம் இந்தியா வந்த போது கொரோனா வைரஸ்  அதிகரிக்க தொடங்கியதால்  தொடர் பாதிலேயே நிறுத்தப்பட்டடு தென்ஆப்பிரிக்க வீரர்கள் அவசரமாக சொந்த நாடு திரும்பினர். இந்த கொரோனா வைரஸ் எனக்கு ஆறு மாத ஓய்வை அளித்தது மிகவும் மிகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மீண்டும் களத்திற்கு திரும்பும் எண்ணமே இல்லை என்று கூறினார்.