வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் இந்த பானத்தை குடித்து பாருங்கள்! நீங்கள் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது!
தற்போது பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் நம்மிடையே குறைந்தபாடில்லை. நாம் அதற்கு முதலில் கவனம் செலுத்த வேண்டியது நமது உடல் ஆரோக்கியத்தில் தான். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத பானத்தை நாம் தற்போது பார்க்க இருக்கிறோம்.
உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த பானத்தை தயாரிக்கும் வழிமுறை பார்ப்போம்.
1. இதற்கு நாம் முதலில் எடுத்துக் கொள்வது ஒரு முழு ஆப்பிள். ஆப்பிளில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி6 பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
2. இரண்டாவதாக நாம் எடுத்துக் கொள்வது பீட்ரூட் ஒரு அறை பீட்ரூட் நமக்கு தேவைப்படும் பீட்ரூட்டில் வைட்டமின் சி, பொட்டாசியம், மாங்கனிசு, இரும்புச்சத்து, ஆகியன உள்ளன. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், கெட்ட கொழுப்பை கரைப்பதற்கும் இது மிகவும் உதவுகிறது. நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
3. அடுத்து சிறிய கேரட் துண்டுகள் இரண்டு. இதில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 என பல்வேறு சத்துக்கள் உள்ளன. மேலும் கால்சியம், பொட்டாசியம், மாங்கனிசு, செலினியம், நார் சத்துக்கள் உள்ளன. பார்வைக்கு மிகவும் ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.
இரண்டு பேர் சாப்பிடும் அளவில் இந்த பானத்திற்கான அளவு கொடுக்கப்பட்டுள்ளது.
இவை மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும். சிறிது புதினா இலைகளை சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வடிகட்டி கொண்டு தண்ணீர் ஊற்றி இதனை வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
இந்த பானத்தை வாரத்தில் இரண்டு நாட்கள் குடிக்கலாம். சுவைக்காக எதையும் சேர்க்க வேண்டியது இல்லை. இதை எடுத்துக் கொள்வதன் மூலம்
1. ஞாபக சக்தி அதிகரிக்கும்.
2. ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
3. ஹார்மோன் அளவை சரி செய்து மன அழுத்தத்தை போக்கும்.
4. வயிற்றில் உள்ள புண்களை சரி செய்து மேலும் கெட்ட கொழுப்புகளையும் குறைக்கும்.
5. செரிமான சிக்கலை சரி செய்து மலச்சிக்கலை போக்கும்.
6. காய்ச்சல், ஆஸ்துமா, இரத்த சோகை, இவைகள் வராமல் பாதுகாக்கும்.
7. உடலில் ஹீமோகுளோபின், இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
8. கல்லீரலை சுத்தப்படுத்தி ரத்தத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும்.
9. கண் தசைகளை பலப்படுத்தி கண் பார்வையை கூர்மையாக்கும்.
10. குழந்தைகளுக்கு வாரத்தில் இருமுறை கொடுத்து வர அவர்களின் நினைவாற்றல் அதிகரித்து கவனிக்கும் திறனும் அதிகரிக்கும்.