இனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்!

Photo of author

By CineDesk

இனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்!

நோய் வந்த உடனே மருத்துமனைக்கு ஓடுவதை விட்டு விட்டு, வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எளிதான முறையில் நோயினை குணப்படுத்தலாம். நம்மில் பலர் சிறிய வயதில் கட்டாயம் பாட்டி வைத்தியத்தை செய்திருபோம் தற்போது வளர்ந்து வரும் காலக்கட்டங்களின் பாட்டியின் வைத்தியத்தை யாரும் விரும்புவது இல்லை என்றாலும் பாட்டி வைத்தியத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. அதன் வகையில் வழக்கம் போல் தர்பூசணி பழத்தை சாப்பிடுவதோடு மட்டும் விட்டுவிடாமல்  தர்பூசணிப்பழ சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்றாக விட்டு விடுங்கள்.

பின்பு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தில் இருக்கும் தோல் சுருக்கங்கள் நீங்கி முகம் தெளிவடையும். நம்முடைய உடலை கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள, நமக்கு உதவப் போவது தேங்காய்ப் பால். இந்த தேங்காய்ப்பாலை தினமும் காளை வெறும் வயிற்றில் ஒரு சிறிய டம்ளர் அளவு குடித்து வந்தால் உடல் கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் இருக்கும். மேலும் வாயில் உள்ள புண்கள் குணமாகும். முடி கொட்டும் பிரச்சினைக்கு  முட்டை, கீரை வகைகள் குறிப்பாக முருங்கைக் கீரை, கேரட், பப்பாளி, சக்கரைவள்ளி கிழங்கு, பச்சைப்பயறு, கருப்பு கொண்டை கடலை, நெல்லிக்காய், கொய்யாப்பழம், மீன் வகைகள், காலிஃப்ளவர், பன்னீர்,  மஸ்ரூம், டிரைஃபுரூட்ஸ்,  பச்சைப் பயிறு, கருவேப்பிலை, பேரிச்சம்பழம் என  இந்த பொருட்களை உங்களுடைய அன்றாட உணவில் மாற்றி மாற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரே உணவை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பொருட்களை தொடர்ச்சியாக நாம் சாப்பிட்டு வரவேண்டும்.