இந்த விளக்கை மட்டும் ஒரு முறை ஏற்றி பாருங்கள்! எப்பொழுதும் நீங்கள் கோடீஸ்வரர் தான்!

இந்த விளக்கை மட்டும் ஒரு முறை ஏற்றி பாருங்கள்! எப்பொழுதும் நீங்கள் கோடீஸ்வரர் தான்!

அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நாம் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதுதான். அதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.செல்வ வளம் தரும் அஷ்டலட்சுமி குபேர விளக்கு

ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளை சொல்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இந்த அஷ்டலட்சுமிகளை மறக்காமல் துதித்து வந்தால் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.செல்வத்தின் அதிபதியாக விளங்குபவர் குபேரர். குபேரரை வணங்கி வர அவரின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம்.

அஷ்டலட்சுமிகளுடன் கூடிய குபேர விளக்கை தொடர்ந்து ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சனைகள், சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நம் வாழ்வில் செல்வம் பெருகும்.

அஷ்டலட்சுமி குபேர விளக்கை எப்போது ஏற்ற வேண்டும்:அஷ்டலட்சுமி குபேர விளக்கை அனைத்து நாட்களிலும் ஏற்றி வழிபடலாம். குறிப்பாக குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்றும், அஷ்டலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்றும் ஏற்றி வழிபடுவது மிக சிறந்தது.

மேலும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நீராடி, தூய்மையான ஆடை உடுத்தி, குலதெய்வத்தை மனதில் நிறுத்தி அஷ்டலட்சுமி குபேர விளக்கை ஏற்றி வழிபடுவது இன்னும் சிறப்பான பலன்களை தரும்.

 

Leave a Comment