மீன் குழம்பு மசால் இப்படி தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்!! அட அட என்ன ஒரு டேஸ்ட்னு சொல்ற அளவிற்கு இருக்கும்!!

0
79
#image_title

மீன் குழம்பு மசால் இப்படி தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்!! அட அட என்ன ஒரு டேஸ்ட்னு சொல்ற அளவிற்கு இருக்கும்!!

நம் அனைவருக்கும் பிடித்த அசைவத்தில் ஒன்று மீன்.இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.இந்த மீனில் ப்ரை,பிரியாணி,குழம்பு என்று பல வகைகளில் உணவு சமைக்கப்பட்டு வருகிறது.இதில் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக மீன் குழம்பு செய்ய பயன்படும் மீன் குழம்பு மசால் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை – 1 கப்

*சீரகம் – 1 1/2 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி

*காய்ந்த மிளகாய் – 15 முதல் 20

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

*எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.முதலில் அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் கொத்தமல்லி விதை 1 கப்,சீரகம் 1 1/2 தேக்கரண்டி,கருப்பு மிளகு 2 தேக்கரண்டி மற்றும் கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு சேர்த்து மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

2.அதே கடாயில் காய்ந்த மிளகாய் 15 முதல் 20 வரை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.மிளகாய் கருகி போகாமல் மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்து கொள்ளுங்கள்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.இதை ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருள்களில் சேர்க்கவும.வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிடவும்.

3.அவை ஆறியப்பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் குழம்புக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

4.பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.இதை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.

இந்த மீன் குழம்பு மசாலை 3 முதல் 4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.மசால் செய்வதற்கு வறுத்தலுக்குப் பதிலாக வெயிலில் முழுவதையும் உலர்த்தி அரைக்கலாம்.அதேபோல் மீன் குழம்பு அதிக சுவையாக இருக்க மசால் அரைக்கும் பொழுது மஞ்சள் தூளுக்கு பதிலாக புதிய உலர்ந்த மஞ்சளைப் பயன்படுத்தியும் மீன் குழம்பு மசால் தூள் செய்யலாம்.

Previous articleசிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!
Next articleகரம் மசால் தூள் இப்படி செய்து குழம்புக்கு பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்!!