கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!

Photo of author

By Kowsalya

நிறைய பேர் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்கள் காரணமாக அதிகமான உடல் எடை மற்றும் தொப்பை வந்துவிடுகிறது. அதிக உடல் எடை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நல்ல பயனளிக்கும்.

எனவே தேவையில்லாத அழுக்குகளை நீக்கி தொப்பையை குறைக்க கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கருஞ் சீரகம் ஒரு ஸ்பூன்

2. ஓமம் 1 டீஸ்பூன்

3. சோம்பு ஒரு ஸ்பூன்

4. தேன் ஒரு ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

3. நல்ல வாசனை வந்தவுடன் அதில் 250 மில்லி தண்ணீரை சேர்த்து கொள்ளவும்.

4. நன்கு கொதிக்க விடவும்.

5. தண்ணீர் 100 மில்லி வரும்வரை கொதித்த பின் அடுப்பை அணைத்து விட்டு அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

6. இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம் உங்களுடைய இஷ்டத்திற்கு ஏற்ப.

இப்போது இதை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலையில் டீ காபிக்கு பதிலாக அருந்தலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும் தன்மை கொண்டது. இந்த மூன்று பொருட்களும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து நோய்களையும் நீக்கக்கூடிய மகத்துவம் வாய்ந்தது..

தொடர்ந்து இதனை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடலில் ஏற்படும் மாற்றத்தை ஓரிரு நாட்களிலேயே உங்களால் காண முடியும்.