இந்த எண்ணெய் ஒருமுறை தடவிப் பாருங்கள் மூட்டுவலி, முதுகுவலி, இடுப்புவலி, கால்வலி நிரந்தரமாக சரியாகும்!

Photo of author

By Kowsalya

இக்காலத்தில் மூட்டு வலி, முதுகு வலி, இடுப்புவலி, கால் வலி என்பது சிறு வயதிலேயே வந்துவிடுகிறது காரணம் உணவு பழக்கங்கள் தான். தேவையற்ற உணவுகள் தேவையற்ற நேரங்களில் எடுத்துக் கொள்வதினால் அனைத்து பிரச்சினைகளும் வருகின்றன.

இப்பொழுது மூட்டு வலி முதுகு வலி இடுப்பு வலி கால் வலி என அனைத்தையும் சரி செய்யக் கூடிய நாம் மறந்துவிட்ட நமது முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை வழிமுறைகளை காண்போம்.

தேவையான பொருட்கள்:

1. பட்டை 10(சிறியது)
2. கிராம்பு 1 டீஸ்பூன்
3. கருப்பு எள் ஒரு டீஸ்பூன்
4. ஓமம் ஒரு ஸ்பூன்
5. வெந்தயம் ஒரு ஸ்பூன்
6. பூண்டு 5 பல்
7. நல்லெண்ணெய் ஒரு கப்
8. வேப்பெண்ணெய் 25ml
9. பச்சைக் கற்பூரம்

செய்முறை:

1. ஒரு சிறிய உரலை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதில் பட்டை, கிராம்பு, கருப்பு எள், ஓமம், வெந்தயம், ஆகியவற்றை சேர்த்து பொடியாக இடித்துக் கொள்ளவும்.
3. 5 பல் பூண்டு சேர்த்து இடித்து கொள்ளவும்.
4. ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ளவும்.
5. கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி மிதமான தீயில் எரிய விடவும்.
6. பின் வேப்ப எண்ணையை 25ml ஊற்றவும்.
7. எண்ணெய் சூடானவுடன் இடித்து வைத்த அனைத்து கலவையை அதில் போடவும்.
8. பத்து நிமிடம் அப்படியே கொதிக்க விடவும்.
9. கொதித்த பின் அடுப்பை அணைத்துவிட்டு நான்கு மணி நேரம் அந்த எண்ணெயுடன் அந்த கலவையை ஊற வைக்கவும்.
10. அதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
11. அதில் பச்சை கற்பூரம் அரை ஸ்பூன் போட்டு கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

1. இது உங்களுக்கு எந்த இடத்தில் வலி இருக்கிறதோ எப்பொழுது இருக்கிறதோ இதை தடவி விடலாம்.
2. இரவு படுக்கச் செல்லும் முன் அரைமணி நேரத்திற்கு முன் எங்கு வலி இருக்கிறதோ முக்கியமாக முதுகுத் தண்டுகளில் நன்றாக தேய்த்துவிட சொல்லி தேய்த்துக் கொள்ளுங்கள்.
3. இவ்வாறு தொடர்ந்து நீங்கள் செய்து வர ஒரு வாரத்திலேயே உங்களுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி, கால் வலி இடுப்பு வலி விரைவில் குணமடையும்.
4. குளிக்கப் போவதற்கு அரைமணிநேரம் முன்கூட எண்ணையை நன்றாக தேய்த்து விட்டு பின் குளிக்கலாம்.