எவ்வளவு கருப்பான எண்ணெய் படிந்த பாத்திரமாக இருந்தாலும் சரி! 2 நிமிடத்தில் அனைத்து கரைகளும் போய்விடும்!

0
73

எத்தனை தடவை பாத்திரத்தை தேச்சாலும் உங்களுடைய பாத்திரத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு போக வில்லையா? இதோ உங்களுக்கான அற்புதமான முறை

முறை 1:

1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய பேஸ்ட் போட்டு கொள்ளவும். எந்த பேஸ்டாக இருந்தாலும் சரி பயன்படுத்தலாம்.

3. ஒரு ஸ்பூன் அளவிற்கு சமையல் சோடா சேர்த்துக் கொள்ளவும்.

4. முட்டையின் வெள்ளை ஓட்டை இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. கொஞ்சமாக வினிகர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கொள்ளலாம்.

இப்பொழுது இதை நன்றாக கலந்து கொள்ளவும்.இப்பொழுது நுரை பொங்கி வரும். இதை ஒரு இரும்பு நாரை (Scruber) எடுத்து பாத்திரத்தில் நன்கு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வரை நன்றாக தேய்த்து விடவும்.

இப்படி தேய்க்கும் பொழுது பேணின் அடியில் உள்ள எண்ணெய்ப் பிசுக்குகள் உடனடியாக நீக்கிவிடும்.

முறை 2:

இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் முறையானது நமது இண்டோலியும் கடாய் அல்லது சில்வர் பாத்திரத்தில் உள்ள எண்ணெயை பிசுக்குகள் மற்றும் அடியில் உள்ள கருப்புகள் எப்படி நீக்குவது என்று தான்.

1. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

2. அதில் இரண்டு ஸ்பூன் சோப்பு தூள் நீங்கள் பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு சோப்புத்தூள் இருந்தாலும் பயன்படுத்தலாம்.

3. ஒரு ஸ்பூன் அளவிற்கு சமையல் சோடாவை சேர்த்து கொள்ளவும்.

4. பின் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும்.

5. இப்பொழுது மெல்ல கொதி வந்த நிலையில் பாத்திரத்தை எடுத்து எந்தப் பகுதியில் பிசுக்கு அதிகமாக உள்ளதோ அந்த இடத்தை எடுத்துக் கொதித்து கொண்டிருக்கும் தண்ணியில் வைத்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.

6. நன்றாக எண்ணெய் பிசுக்கு போக வேண்டும் எனில் அடுப்பை குறைத்தும் அதிகப்படுத்தியும் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் கருப்பு பிசுக்கு பகுதி சீக்கிரம் நீங்கும்.

7. இப்போழுது சிறிய பவுல் எடுத்துக் கொள்ளவும்.

8. அதில் சோப்புத்தூள் அரை ஸ்பூன், சமையல் சோடா அரை ஸ்பூன், அரை எலுமிச்சையை வெட்டி அதைத் தொட்டு பாத்திரத்தை தேய்க்க வேண்டும்.

9. இப்படி செய்து ‌வாருங்கள் உங்களுடைய பாத்திரத்தில் இருக்கும் எண்ணெய் கரைகள் மற்றும் கருப்பு படிந்த பக்கங்கள் அனைத்தும் நிமிடத்தில் போய்விடும்.

author avatar
Kowsalya