முக அழகை கெடுக்கும் பள்ளங்கள் 7 நாளில் மறைய இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க..!!

0
54
#image_title

முக அழகை கெடுக்கும் பள்ளங்கள் 7 நாளில் மறைய இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க..!!

நம் அனைவருமே முகத்தை அழகாக வைத்துக் கொள்ள ஆசைக் கொள்கிறோம். ஆனால் ஆரோக்கியமற்ற வாழக்கைமுறை காரணத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள், பருக்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதிலும் முகத்தில் பள்ளம் ஏற்படததொடங்கி விட்டால் முக அழகு முழுமையாக நீங்கி விடும். இவற்றால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை நாம் சந்திக்க நேரிடும். இதை சரி செய்ய சில இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை ஜெல்

செய்முறை…

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு இதை முகத்தில் பள்ளங்கள் இருக்கும் இடத்தில் தடவி நன்கு மஜாஜ் செய்து கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முக பள்ளங்கள் மறையும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*முட்டை

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் இதை முகத்தில் தடவி நன்கு மஜாஜ் செய்யவும்.

அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முக பள்ளங்கள் மறையும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*வெள்ளரிக்காய்

செய்முறை…

ஒரு துண்டு வெள்ளரிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை முகத்தில் தடவி நன்கு மஜாஜ் செய்யவும்.

அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முக பள்ளங்கள் மறையும்.