முடி உதிர்வு முற்றிலும் நின்று அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க!

0
37

முடி உதிர்வு முற்றிலும் நின்று அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க!

இன்றைய காலத்தில் அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இவற்றிக்கு ஜீன் குறைபாடு,மன அழுத்தம்,காற்று மாசு,உணவு முறையில் மாற்றம்,தூக்கமின்மை,ஹார்மோன் மாற்றம்,பொடுகு பிரச்சனை,ஊட்டச்சத்து குறைபாடு,ரசாயனம் அதிகம் நிறைந்த ஷாம்பு போன்றவைகள் பொதுவான காரணங்களாக சொல்ல படுகின்றது.முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் திணறி வரும் நிலையில் இப்பிரச்சனைக்கு உரிய எளிய தீர்வுகள் பல இருக்கின்றன.

முடி உதிர்வு பாதிப்பை உணவு முறை மூலம் கட்டுப்படுத்த முடியும்.புரோட்டின்,ஒமேகா 3,இரும்பு சத்து,வைட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும்.மேல குறிப்பிட்டுள்ள சத்துக்கள் அடங்கியுள்ள உணவு பொருட்களான மீன்,வால்நட்,ஆளிவிதை,முட்டை,இறைச்சி,பால்,தயிர்,காரட்,கீரைகள்,நட்ஸ், காளான் உள்ளிட்டவைகளை தினசரி வாழ்வில் உட்கொண்டு வருவதன் மூலம் நல்ல பலன்களை காணலாம்.

முடி உதிர்வு பிரச்சனையை மூலிகை எண்ணெய் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும்.

தேவையான பொருட்கள்:-

*சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1லிட்டர்

*வெந்தயம் – 2 ஸ்பூன்

*செம்பருத்தி இலை -10

*பெரு நெல்லிக்காய் -1

*கருவேப்பிலை -1 கைப்பிடி அளவு

செய்முறை:-

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கொண்டு அதில் வெந்தயம்,செம்பருத்தி இலைகள்,பெரு நெல்லி கொட்டை எடுத்தது,கருவேப்பிலை உள்ளிட்டவற்றை போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பு பற்ற வைத்து ஒரு இரும்பு கடாய் ஒன்றை எடுத்து அதில் சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வெதுவெதுப்பான நிலை வரும் வரை காத்திருக்க வேண்டும்.பிறகு அரைத்து வைத்துள்ள விழுதுகளை எண்ணெயில் சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்.இவ்வாறு எண்ணெயில் அரைத்த விழுதுகளின் சாறு இறங்கும் வரை மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்.பிறகு நிறம் வந்தவுடன் அடுப்பை அணைத்து அவற்றை ஆற வைக்க வேண்டும்.நன்றாக ஆறிய பிறகு இந்த மூலிகை எண்ணெய்யை ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.பிறகு தினமும் தலை முடிகளுக்கு தேய்த்து வருவதன் மூலம் முடி உதிர்தல் பாதிப்பு நின்று கருமை நிறத்தில் அடர்த்தியாக முடி வளர தொடங்கும்.