தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. தற்போது அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது சில தனியார் பள்ளிகளில், இந்த விடுமுறை காலங்களில், வரும் கல்வியாண்டிற்கான கட்டணம் வசூலிக்கப் படுகிறது என புகார்கள் வந்துள்ளது. ஆனால் தமிழக அரசின் கமிட்டி, கட்டணம் நிர்ணயித்த பின்னரே மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என தனியார் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அரசால் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் இந்த ஆண்டிற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது . இதன் அடிப்படையில் அதிக கட்டணம் வசூலித்தால், அதாவது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை செய்துள்ளது.