கலங்கடிக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு உயர்ந்து இருக்கு?

0
381
#image_title

கலங்கடிக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு உயர்ந்து இருக்கு?

நம் இந்தியர்களுக்கு தங்கம் என்றால் தனி பிரியம்.. இதற்காக புது புது வேலைப்பாடுடன் தங்க ஆபரணங்களை நகைக் கடைகள் அறிமுகப்படுத்தி வருகின்றது.

கம்மல், நெக்லஸ், கேரளா ஹராம், அட்டிகை என்று தங்கத்தால் செய்யப்படும் ஆபரணங்களை வரிசைப்படுத்தி கொண்டே செல்லலாம்.

கடந்த 10 வருடத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் மட்டுமே இருந்து வருகிறது. பெயருக்கு அவ்வப்போது இறங்கினாலும் விலை மீண்டும் ஏறிவிடுகிறது.

தங்கம் விலை அதிகரித்தாலும் அதை வாங்கும் வழக்கம் மட்டும் மக்களிடம் குறையவில்லை. இதனால் தான் கோல்ட் மீதான முதலீடு அதிகரிக்கிறது.

இந்த முதலீட்டை இப்பொழுது தொடங்குவது இன்னும் சிறப்பு… தங்கம் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இனி குறைய வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,830க்கு விற்ற நிலையில் இன்று ரூ.5 உயர்ந்து ரூ.5,835க்கு விற்பனையாகி வருகின்றது. சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.6,360க்கு விற்ற நிலையில் இன்று ரூ.5 உயர்ந்து ரூ.6,365க்கு விற்பனையாகி வருகின்றது. 8 கிராம் தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ.50,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி: கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.76.80க்கும், 1 கிலோ வெள்ளிக்கு ரூ.30 உயர்ந்து ரூ.76,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleமக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!
Next articleதமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!