பல நன்மைகளை அள்ளித் தரும் மஞ்சள் டீ!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?

Photo of author

By Sakthi

பல நன்மைகளை அள்ளித் தரும் மஞ்சள் டீ!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?
நம் உடலுக்கு பல நன்மைகளை தரும் மஞ்சள் டீ தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் பற்றி நமக்கு நிறைய தகவல்கள் தெரியும். மஞ்சள் எதற்கு எல்லாம் பயன்படுகிறது மஞ்சள் மூலம் நமக்கு கிடைக்கும் சத்துக்கள் என்ன என்பது பற்றி நமக்கு தெரியும். இதில் டீ தயாரித்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றியும் மஞ்சள் டீ தயார் செய்வது பற்றியும் பார்க்கலாம்.
மஞ்சள் டீ தயாரிக்க தேவையான பொருட்கள்…
* மஞ்சள் பொடி
* இஞ்சி
* தேன்
* தண்ணீர்
தயார் செய்யும் முறை…
அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து அதன் பின்னர் மஞ்சள் பொடி சேர்க்க வேண்டும்.
அதன் பின்னர் இதில் சிறிதளவு இஞ்சியை தட்டி சேர்த்துக் கொள்ளை வேண்டும். நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். ஆற வைத்த பிறகு இதில் சுவைக்காக தேன் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம்.
தேன் பிடிக்காதவர்கள் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். ஆனால் வெள்ளை சர்க்கரை மட்டும் சேர்க்கக் கூடாது. இந்த மஞ்சள் டீயை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தற்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…
* இந்த மஞ்சள் டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.
* மஞ்சள் டீ குடிப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும் மஞ்சள் டீ தயார் செய்து குடிக்கலாம்.
* மஞ்சள் டீ குடிப்பதால் ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
* தசை மற்றும் எலும்புகளில் ஏற்படுகின்ற வலியை குறைத்து அதிகப்படியான வளைவுப் தன்மையை தருகின்றது.