இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறிய ட்விட்டர் நிறுவனம்! எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பாபரப்பு மனு தாக்கல்!

0
206

உலகத்தின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கிவரும் ட்விட்டர் சில முக்கிய விஷயங்களை பகிரவும், கருத்துக்களை தெரிவிக்கும் வலைதளமாகவும், இருந்து வருகிறது.

இந்த வலைதளத்தை உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலன் மஸ்க் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு வாங்குவதாக கூறியிருந்தார். இதற்கான ஒப்பந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தான் ட்விட்டரில் இருக்கின்ற போலி கணக்குகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார் எலான் மஸ்க்.

இருந்தாலும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்ததை விட 4 மடங்கு போலி கணக்குகள் அதிகமாக இருப்பதாகவும், இது தொடர்பாக முழுமையான தகவலை ட்விட்டர் தெரிவிக்கவில்லை என்பதால் ஒப்பந்தத்தை கைவிடப் போகிறேன் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதோடு ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளும் 7% சரிந்தது, இதனை தொடர்ந்து ஒப்பந்தத்தை கைவிடுமாறு தெரிவித்த எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவிலிருக்கின்ற டெலாவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் உள்ளிட்டோருக்கிடையே இருக்கின்ற பிரச்சனைகள் மற்றும் மாறி, மாறி, இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மைக்ரோ பிளாக்கிங் தளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

எல்லா மஸ்க் மற்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கிடையே நடைபெற்று வரும் வழக்கு குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் ரகசியமாக பதில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனதில் இந்தியாவிற்கும், ட்விட்டருக்குமிடையே கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக நிலை வரும் பிரச்சனைகள் தொடர்பாக தெளிவாக தெரிவிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியிருக்கிறார்.

அதோடு டிவிட்டரில் தேவையற்ற கருத்து பதிவுகளை பகிரும் நபர்களின் பக்கங்களை இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2000ன் கீழ் நீக்குமாறு அந்த நிறுவனத்திடம் இந்திய அரசு வலியுறுத்தியது. இது தொடர்பான வழக்கும் கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் இந்த உத்தரவை மீறியதன் காரணமாக, ட்விட்டர் மிகப்பெரிய சந்தை அபாயத்தில் சிக்கி இருப்பதாகவும் எலன் மஸ்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்தார். இந்த தகவல் பெறும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கும்போது சென்ற வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசாங்கம் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்ததிலிருந்து சில கணக்குகளை கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறது.

ஆகவே இந்திய அரசாங்கத்துடன் இந்த ட்விட்டர் நிறுவனத்தின் தொடர்புகளை இந்த பிரிவில் வெளியிட தேவையில்லை எனவும், ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதோடு எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் இந்தியா தன்னுடைய 3வது பெரிய சந்தை இல்லை என்று கூறியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.

அதிலும் குறிப்பாக இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் வழக்குகளை வெளிப்படுத்த தேவையில்லை எனவும்,எலான் மஸ்க்கின்மனுவிற்கு ட்விட்டர் நிறுவனம் பதிலளித்திருக்கிறது.

இந்த வழக்கு தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், என்ன நடக்கும்? இந்த சட்டப் போராட்டத்தில் எலான் மஸ்கா? அல்லது டிவிட்டர் நிறுவனமா? யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்ப்பதற்கு ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது.

Previous articleசிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
Next articleதேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்!