தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்!

0
191

எதிர்வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் நடைபெறவிருந்த தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்கள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளுக்கான கணினி வழி தேர்வு வரும் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நிர்வாகக் காரணங்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், முதல் தாளுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்படவிருக்கிறது.

கணினி வழி தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ள தேர்வுக்கு15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும், அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Previous articleஇந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறிய ட்விட்டர் நிறுவனம்! எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பாபரப்பு மனு தாக்கல்!
Next articleவிறுவிறுப்பாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்! குளிர்கால கூட்டத் தொடருக்கு தயாராகும் மத்திய அரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here