கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் இரண்டு பேர் கைது! ஈரோடு போலீசார் விசாரணை!
சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம்மானது மாலை நேரத்தில் வன்முறையாக மாறியது. அந்த பள்ளியில் உள்ள அனைத்து வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் வகுப்பறையின் கண்ணாடிகள் மேசைகள் போன்றவற்றை மாணவர்கள் சூறையாடினர்.
மேலும் இந்த போராட்டத்தில் 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் போராட திட்டமிட்டு உள்ளதாக வாட்ஸ் அப்பில் குழு அமைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டக்காரர்களை திரட்டுவதாகவும் தகவல் வந்தது. அந்த தகவலின் பெயரில் அண்ணா நகர் கீழ்ப்பாக்கம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள எமகண்டனூரை சேர்ந்தவர் அசோக் (19) மற்றும் ஸ்ரீதர் ( 22). என்ற இரண்டு நபர்களும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு வாட்ஸ் குரூப் மூலம் ஆட்களை திரட்டி சேலம் ரயில் நிலையம் முன் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இந்த செய்தி அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் என்பவர் கொடுமுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.அந்த தகவலின் பேரில் கொடுமுடி காவல்துறையினர் அசோக் மற்றும் சேதுரை தேடி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் ஒன்று கூடுவது என்றும் அங்கு பெரிய அளவில் போராட்டம் நடத்தி பொது அமைதியை கெடுக்கவும், பொது சொத்துக்களை சேதம் விளைவிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று இவர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அசோக் மற்றும் ஸ்ரீதர் அவர்களை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். இது போன்ற வாட்ஸ் அப் குரூப் மூலம் போராட்டத்திற்கு ஆட்களை திரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.