நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா?

0
75
National Herald case: This enforcement inquiry is to take revenge on the opposition parties! Is BJP using the government for its selfish interests?
National Herald case: This enforcement inquiry is to take revenge on the opposition parties! Is BJP using the government for its selfish interests?

நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா?

நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தின் உறுப்பினர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி செயல்பட்டு வந்தனர். நாளடைவில் இந்த பத்திரிக்கை நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதிலிருந்து மீள 90 கோடி ரூபாய் கடன் காங்கிரஸிலிருந்து அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனிடையே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தனியே உறுப்பினர்களாக உள்ள என்கின்ற நிறுவனம் நேஷனல் ஹெரால் நிறுவனத்தின் வெளியீட்டாளரான அசோசியேட் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியது. பிறகு நேஷனல் ஹெரால் நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்த பெற்ற கடனை யங் இந்திய நிறுவனம் தருவதாக கூறியது.

அதனைத் தொடர்ந்து நேஷனல் ஹெராய்டு நிறுவனத்தை அப்படியே யங்  இந்தியா நிறுவனம்  பெயர் மாற்றம் செய்தது. இதனால் அந்த நேஷனல் ஹெரால் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராகும் படி நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதிலிருந்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஆனால் நீதிமன்றமோ அவர்கள் மேல்முறையீட்டு செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த சொத்துக்களை ஆக்கிரமித்தது குறித்து அமலாக்க துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் முதலில் ராகுல் காந்தி இடம் விசாரணை செய்தனர். இன்று சோனியாகாந்த இடம் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை ஆனது மூன்று மணி நேரம் நடைபெற்றது. அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்ததை எதிர்த்து பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக தனது சுயநலத்திற்காக மத்திய அரசை பயன்படுத்துவதாக கூறி 14 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.