சேலம் மாவட்டத்தில் பெண்களை கொலை செய்வதாக மிரட்டிய பெண் உட்பட இருவர் கைது! அதற்கான காரணம் என்ன!
சேலம் மாவட்டத்தில் தலைவாசல் அருகே வீரகனூர் மீனவர் தெருவை சேர்ந்தவர் செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள மல்லிகா என்பவரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வியின் குடும்ப சூழ்நிலை காரணமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.
மேலும் அந்தத் தொகைக்கு முறையான வட்டியும் செலுத்தி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்துள்ளதாக செல்வி தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 26 ஆம் தேதி இரவு செல்வி மற்றும் அவரது மகள் சுகன்யா ஆகிய இருவரும் அருகில் உள்ள பொதுக் கழிப்பிடத்திற்கு சென்று விட்டு வந்தபோது மல்லிகா மற்றும் தியாகராஜன் இருவரும் செல்வியும் அவரது மகளையும் வழி மறைத்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அந்த வாக்குவாதத்தில் அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மல்லிகா மற்றும் தியாகராஜன் இருவரும் செல்வி மற்றும் அவரது மகள் சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி சுகன்யாவின் ஆடையை தியாகராஜன் கிழித்துள்ளார். மேலும் ஆத்திரம் தாங்காமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் மல்லிகாவையும் தாக்கியுள்ளனர்.
மேலும் தங்கள் வீட்டு பக்கம் இனி பணம் கேட்டு வந்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளனர் இதை அடுத்து செல்வி வீரகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வீரகனூர் போலீசார் கொலை முயற்சி உட்பட்ட 3 பிறவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.