10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு!

Photo of author

By Rupa

 10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் அண்ணாதுரை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயியான இவர் கடந்த 29.06.2022 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான பசுக்களை கட்டி வைத்துள்ளார்., இந்நிலையில் மறுநாள் 30.06.2022 அதிகாலை ரகுபதி எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த ஓர் பசு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதே போன்று அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது பசுவும் அதே நாளில் காணாமல் போயிருந்த நிலையில் இருவரும் உமாராபாத் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்த காவல்துறையினர் பசுக்களின் உரிமையாளர்களுடன் பசுக்களை பல இடங்களில் தேடிய நிலையில்,திருடப்பட்ட பசுக்கள் திண்டுக்கல் தும்பம்பட்டி பகுதியில் உள்ள ஓர் விவசாயின் வீட்டில் இருப்பதையறிந்து ரகுபதி மற்றும் பெரியசாமி காவல்துறையினர் உதவியுடன் தும்பம்பட்டியிலிருந்து திருடிச்செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வந்தனர்.

பின்னர் பசுமாடுகளை திருடிச்சென்று விற்பனை செய்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஹரி என்பவரை தேடி வருகின்றனர்.ஆம்பூரில் பசு மாடுகளை திருடி சென்று பின்னர் திண்டுக்கல் அருகே மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.