இரண்டு முக்கிய புள்ளிகள் பாஜகவில்? அண்ணாமலை திட்டவட்டம்!

Photo of author

By Preethi

இரண்டு முக்கிய புள்ளிகள் பாஜகவில்? அண்ணாமலை திட்டவட்டம்!

Preethi

இரண்டு முக்கிய புள்ளிகள் பாஜகவில்? அண்ணாமலை திட்டவட்டம்!

சென்னை தியாகராஜன் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சமூக ஊடகப் பிரிவின் ஒரு நாள் பயிற்சிக்கான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பட்ஜெட் தமிழகத்தின் கடன் சுமையை உணர்த்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகத்திலேயே பெட்ரோல் விலை, டீசல் விலையை குறைத்த ஒரே நாடு இந்தியா.

பிரதமர் மோடி என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவிற்கு பிப்ரவரி 27ஆம் தேதி சரியாக மதியம் 2 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வருகை தருகிறார். இதுவரை 224 தொகுதிகளில் பயணித்துள்ளோம். இன்னும் 10 தொகுதிகள் உள்ளன. அதனை இந்த 6 நாட்களில் கடந்து விடுவோம்.

கூட்டு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு 19% வளர்ச்சியை காட்டுவோம் எனக் கூறி 12% வளர்ச்சியை மட்டுமே ஏற்படுத்தியதன் மூலம் தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை என்பதை நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பட்ஜெட்டில் பெயரை மாற்றி வைத்தாலும் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தான் வழங்குகிறது. மீனவ சமுதாயங்களோடு மத்திய அரசு ஒருங்கிணைந்து இருக்கிறோம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்வுக்கு தயாராக இருக்கிறோம். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வலிமையான கூட்டணி மட்டுமல்ல வெற்றி பெறக்கூடிய கூட்டணி.
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை தேர்தல் வாக்கு முடிவுகள் பேசும். இரண்டு மூன்று நாட்களில் மக்கள் அங்கீகாரம் கொடுத்த இரண்டு முக்கிய புள்ளிகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார்கள். அனைவரையும் ஏக மனதுடன் ஏற்கிறோம்.” எனத் தெரிவித்தார்.