நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

0
207
#image_title

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்ற மக்களின் மனநிலையை அறிய அண்மையில் சி-வோட்டர் மற்றும் இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தின.

அதில் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலாக 44 % மக்கள் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என பதிலளித்து மோடியை முதலிடத்தில் வைத்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், இந்திராகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை 15,14,11 என்ற சதவிகிதத்தில் மக்கள் ஆதரித்துள்ளனர்.

ஜம்முகாஷ்மீரில் இருந்து 370 சட்டப்பிரிவு நீக்கியது, பணமதிப்பிலப்பு , கொரோனா மற்றும் ஊழலுக்கு எதிரான மோடியின் செயல் போன்ற காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியை அதிகபடியான மக்கள் ஆதரித்தள்ளதாக தெரிகிறது.

author avatar
Savitha