பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By CineDesk

பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

CineDesk

Two people who ate the dead body of the woman!! Police action!!

பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாமூன் பந்தாசாஹி என்னும் கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் இருபத்தைந்து வயது உள்ள மதுஸ்மிதா சிங் எனப்படும் ஒரு இளம் பெண்ணின் உடலை கடந்த ஜூன் 11 ஆம் தேதி உறவினர்கள் தகனம் செய்துவிட்டு சென்றனர்.

பெண்ணின் உடல் புதைக்காமல் எரிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் எரிந்த சில நிமிடங்களிலேயே மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் என்னும் இருவர் இந்த எரிந்த உடலை சாப்பிட துவங்கி உள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த  மதுஸ்மிதா சிங் பெண்ணின் குடும்ப உறவினர்கள் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங்கை பிடித்து கட்டி வைத்தனர்.

பிறகு இது குறித்து காவல் துறையினருக்கு புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த படாசாஹி காவல் துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்பொழுது அனைவருக்கும் அதிர்ச்சியை தரும் வகையில், இவ்வாறு திருமணம் ஆகாதா இளம் பெண்களின் சதையை சாப்பிட்டு வருவதால் உடலிற்கு சக்தி கிடைக்கும் என்று கூறி உள்ளனர்.

இந்த பதில் காவல் துறையினருக்கும் பெண்ணின் குடும்பத்தினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, காவல் துறையினர் தொடர்ந்து இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பெண்ணின் உடலை தின்றால் சக்தி கிடைக்கும் என்று இந்த இருவர் செய்த செயல் ஒடிசா மாநிலத்தில் உள்ள பந்தாசாஹி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.